வல்லவன் கோட்டை கல்வெட்டு விவரத்தினை நம்மோடு மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை தலைவர் முனைவர் சுதாகர் அவர்கள் பகிர்ந்து கொண்டார். அதைத்தான் தங்களிடம பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
இப்போது உள்ள அரசியல்வாதிகளில் கணிசமான அளவினர் பல குற்றப் பின்புலம் உடையவர்கள்?. அதுமட்டுமின்றி உழல் கறை படிந்தவர்கள். 1228 ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் சட்டங்கள் எவ்வளவு அருமையாக உள்ளது. இவ்வகை நல்ல சட்டங்கள் மற்றும் பாரம்பரியம் எப்படி அழிந்தது?
இந்த சட்ட திட்ட அழிவே சமுதாய சீரழிவாகப் பின்னாளில் உருவெடுத்ததோ? என்ற சிந்தனையையும் தானாகவே எனக்குள் தலைதூக்குகிறது.
இப்போது புதிதாகக் கட்டப்பட்ட பாலங்கள் மற்றும் கட்டங்கள் சில ஆண்டுகளில் வலுவிழந்து இடிந்து விழுகின்றன. ஆனால் பண்டைய கட்டடங்கள் திடமாக இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. இந்த வலிமைக்கு அந்த காலத்திலிருந்த சிறந்த சட்ட திட்டங்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.?
அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள். பாண்டியர்களின் ஆட்சியில் பொதுப்பணிக்குத் தேர்வானவர்கள் ஐந்து ஆண்டு களுக்கு மட்டுமே பதவியில் இருக்க முடிந்துள்ளது.
ஒரு அமெரிக்க ஜனாதிபதி அதிக பட்சமாக இரண்டு முறை மட்டுமே ஆட்சி செய்ய முடியும். அதாவது எட்டு ஆண்டுகள்தான் ஆட்சி செய்ய முடியும். ஆனால் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணியில் ஒருவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே சேவை செய்யமுடியும். தற்போதைய அமெரிக்கச் சட்டத்தை விடப் பாண்டி யர்களின் சட்ட திட்டங்கள் கடுமையாகத்தான் இருந்துள்ளது. அதனால்தானோ என்னவோ? அந்த காலத்தில் தமிழகம் சிறந்தது விளங்கியுள்ளது. மேலும் பல நாட்டினரைத் தமிழகம் தன் பால் ஈர்த்துள்ளது எனக் கருதுகிறேன். அன்று கட்டிய கோயில்கள் இன்றும் கம்பீரமாக நிற்கிறன.
வல்லவன் கோட்டை மலையைச் சுற்றிப் பார்த்தோம். அப்போது இந்த குன்றிற்கு வடபுறத்தில் சுமார் ஐம்பது அடி உயரப் பாறைகளை வட்ட வடிவமாக நட்டு வைத்தது போல் தெரிந்தது?. அவைகளை பண்டைய தமிழ் பெருமக்கள் நட்டிருக்கலாம் என எண்ணினோம்.
அந்த வட்டப் பாறை மலை உச்சியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து.? எங்களால் அதனைப் பார்க்க முடிந்ததே தவிர அங்குச் செல்ல முடியவில்லை. காரணம் நாங்கள் நிற்கும் இடத்திற்கும் அந்த அமைப்பிற்கும் இடையே ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருந்தது. மேலும் அந்த அமைப்பைச் சுற்றி அடர்த்தியாக முட்செடிகள் வாழ்ந்து இருந்தது.
அங்குச் செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் கட்டாயம் அடர்ந்த காட்டை கடந்தாக வேண்டும். அதனால் மீண்டும் மறுநாள் அந்த மலையைச் சுற்றி நடந்து அந்த அடர்ந்த காட்டுக்குள் நடந்தோம். சற்று நேரத்தில் காட்டுக்குள்ளிருந்தது அந்த உயர்ந்த வட்டப் பாறை அமைப்பைப் பார்க்க முடியவில்லை.
எனக்கு என்ன செய்ய எனப் புரியவில்லை.
எங்கள் தொல்லியல் உதவிப் பேராசிரியர் முருகன் தரையில் குத்தவைத்து அமர்ந்தார். உயரமான ஒரு மாணவனை அவர் தோளில் எறி அமரச் சொன்னார். பின்னர் இவர் எழுந்து நின்றார். பின்னர் “அந்த மாணவனை அந்த வட்டப் பாறைத் தெரிகிறதா?” எனப் பார்க்கச் சொன்னார். அவன் சுற்றிப் பார்த்தான். அந்த வட்டப் பாறையையும் கண்டு பிடித்தான். பின்னர் அவன் செல்லும் வழியில் நாங்கள் முள் மரங்களுக்குக் கீழ் குனிந்த நிமிர்ந்து பயணித்தோம்.
இறுதியாக அந்த வட்டப் பாறைப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அந்த பறையைப் பார்த்தோம். இது நாங்கள் எதிர்பார்த்த மாதிரி பண்டைய மனிதர்களால் நடப்பட்ட பாறைகள் இல்லை. மாறாக இது இயற்கையாக உருவான பாறை அமைப்புதான்.
ஒரு பெரிய பாறை இருந்துள்ளது. அதன் மேல் ஒரு ஆலமரம் முளைத்துள்ளது. அந்த ஆலமரம் வளர்ந்து பெரியதாகும் போது பாறையில் ஆங்காங்கே கீறல்கள் விழுந்துள்ளது. மரம் பெரியதாக பெரியதாக இந்த கீறல்களுக்கு இடையேயான தூரம் அதிகரித்துள்ளது. அதனால் தூரத்திலிருந்து பார்க்கும் போது வட்ட வடிவில் நட்டு வைத்த பாறைகள் போல் காட்சி அளித்துள்ளது.
பெரும் முயற்சி செய்து அதிக எதிர்பார்ப்புடன் இந்த இடத்திற்கு வந்தோம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பு தவிடு பொடியாக நொறுங்கியது. அங்கு நாங்கள் எதிர்பார்த்த மாதிரி எதுவும் இல்லை. இந்த அடர்ந்த காட்டுக்குள் புகுந்து வந்தது என் சிறுவயது அனுபவத்தை ஞாபகப் படுத்தியது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆறு குளம் வாய்க்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளுக்குள் அதிகமாகச் சுற்றித் திரிந்துள்ளேன். அப்பகுதியில் உள்ள பறவைகள், மீன்கள் மற்றும் பூக்களைப் பார்ப்பதற்குத்தான் நண்பர்களுடன் இவ்வாறு சுற்றித் திரிந்தேன்.
ஆண்டுகள் 45 வருடங்கள் கடந்தாலும் காடுகளுக்குள் சுற்றித்திரியும் பழக்கம் மட்டும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அன்றும் இன்றும் இவ்வாறு சுற்றித் திரிவதில் ஒரு சிறந்த நோக்கம் இருந்தது என்னவோ உண்மைதான்.
மற்றுமொரு தகவலுடன் மீண்டும் சந்திப்போம்.
(நதி வற்றாமல் ஓடும்)


