பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் நெல்லை படைப்பாளர் அரங்கில் காமராசு செல்வன் எழுதிய விடிலிக்காடு நாவல் வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் சிற்பி பாமா தலைமை வகித்தார். பாப்பாக்குடி செல்வமணி, முனைவர் கந்தசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூலை வெளியிட முனைவர் ஜோசப்ராஜ், முதல் நூலை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான்,புலவர் வை.ராமசாமி, தமிழ்ச்செம்மல் பாமணி, பட்டிமன்ற நடுவர் புத்தனேரி கோ.செல்லப்பா, கவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, ஆசிரியர் ஆவுடையப்ப குருக்கள், பாப்பாக்குடி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் காமராசு செல்வன் ஏற்புரை வழங்கினார்.


