தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் இரண்டு நாட்கள் ஆட்சி மொழி பயிலரங்கமும் கருத்தரங்கமும் நடைபெற்றன.
ஆட்சிமொழிக் கருத்தரங்கில் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 2024 ஜவகர்லால் நேரு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நெய்தல் யூ ஆண்டோ ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முதல் நாள் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கில் முத்தமிழறிஞர் கலைஞரின் சமுதாயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் மா. பால் இராசேந்திரன் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ஆட்சிமொழி, வரலாறு சட்டம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள் என்னும் தலைப்பில் உலகத் திருக்குறள் பேரவை மோ. அன்பழகன் உரையாற்றினார். தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) செ. கனகலட்சுமி ஆட்சிமொழி ஆய்வும், குறைகளும் நடவடிக்கைகளும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு எடுத்தார்.
முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கா. சரவணகுமார் கணினித் தமிழ் மற்றும் அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் என்ற தலைப்பில் பேசினார். மொழி பெயர்ப்பு என்னும் தலைப்பிலும், தமிழ்ச்செம்மல் விருதாளர் இரா. இராசு மொழிப் பயிற்சி. கலைச் சொல்லாக்கம் எனபயிற்சி வகுப்புகள் எடுத்தனர். ஒருங்கிணைப்பாளராக தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் இந்நிகழ்ச்சிகளின் துணை இயக்குநர் செ. கனகலட்சுமி செயல்பட்டார்.


