தெற்கு காரசேரியில் அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டார வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் கீழ் செயல்படும் அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தெற்கு காரசேரியில் நடந்தது.
இப்பயிற்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு அங்கக பண்ணையம் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமையேற்று வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிற்சியில் தோட்டக்கலை துணை அலுவலர் கமலேஷ் தோட்டக்கலை திட்டங்கள் குறித்தும், வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய பொருட்சிறப்பறிஞர் வேல்முருகன் பஞ்சகாவியா தயாரித்தல், மீன் அமிலம் தயாரித்தல், இயற்கை பண்ணையம் குறித்து விளக்கம் அளித்தார். கால்நடை உதவி மருத்துவர் கனகராஜ் கால்நடை வளர்ப்பு குறித்து பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத் கலைஞர் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர்கள் ராஜலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர்.


