தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி கோயில் நூற்றாண்டு பழமைமிக்கது. இக்கோயிலில் ஆடி மற்றும் தை அமாவாசை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் ஆடி அமாவாசை விழா தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் தாமிரபரணி ஆற்றுக்கரையில் இருந்து பால்குடம் எடுத்து அருளோடு ஆடி வந்தனர்.


