வல்லவன் கோட்டையில் கல்வெட்டைச் செதுக்கிய ஆண்டையும் இந்த கல்வெட்டு விளக்குகிறது என்றனர். இந்தக் கல்வெட்டு கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது இந்த கல்வெட்டு 1228 ஆண்டுகள்க்கு முன் நிறுவப்பட்டது.
தமிழ் என தங்கள் குழந்தை களுக்குப் பெயரிட்டு மகிழும் நம் தமிழ்ச் சமூகம் இவ்வளவு பழமையான தமிழ் கல்வெட்டை வணங்குவதில் வியப்பேதும் இல்லை என்றது என் மனம்.
மேலும் இந்த கோயிலுக்கு வடமேற்கே ஒரு கல்வட்டம் உள்ளது. கல்வட்டம் என்பது பல ஈமத்தாழிகளைப் புதைத்த இடம். இந்த இடத்தை அடையாளப் படுத்த தாழியைப் புதைத்த இடத்தைச் சுற்றி பெரிய பாறைகளால் ஒரு வட்டத்தை நம் முன்னோர்கள் அமைப்பை உருவாகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கோயில் அருகே உள்ள இந்த வட்டக் கல் வட்டமாக இல்லை. மாறாக இது செவ்வக வடிவமாக உள்ளது. இது சுமார் 6 செண்ட் பரப்பளவில் சதுர வடிவில் பெரிய கருங்கல் பாறைகளால் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த இந்த செவ்வக கல் அமைப்பு கல்வெட்டுள்ள அந்த மாடசாமி கோயிலிலிருந்து சுமார் 200 அடி தொலைவில்தான் உள்ளது. அந்த செவ்வக கல்லமைப்பை ஒரு கோட்டையாக உருவகப் படுத்தித்தான் “இந்த கோயிலைக் கோட்டை மாடசாமிக் கோயில் என அழைக்கிறனரோ? ” என்ற எண்ணமும் தோன்றத்தான் செய்தது.
இந்த செவ்வக கல் அமைப்பு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இந்த குழுவினர் கண்டறிந்தனர். மேலும் இதன் அருகே இரும்பை உருக்கிய கழிவுகள், கருப்பு, சிவப்பு, பானை ஓடுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன!
மேலும் வல்லவன் கோட்டை என்ற இவ்வூரின் பெயரே இங்கு நீண்ட வரலாற்று புதைந்துள்ளது எனப் பறைசாற்றுவதாக இருந்தது. .
இந்த ஊரிலிருந்து இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வடக்கே மானூர் என்ற ஒரு சிற்றூர் உள்ளது. அந்த ஊரில்
அம்பலவாண சுவாமி கோவில் மண்டபத் தூண் ஒன்றினில் பாண்டியர் காலத்துக் கல் வெட்டொன்று உள்ளது.
இந்த கல்வெட்டும். பாண்டிய மன்னன் மாறன் சடையனின் முப்பத்தைந்தாம் ஆட்சியாண் டில்தான் நிறுவப் பட்டுள்ளது. இந்த மன்னனைப் பராந்தக வீரநாராயணன் எனவும் அழைப்பார்கள்.
வல்லவன் கோட்டை கோட்டை மாடசாமி கோயிலில் காணப் பட்ட கல்வெட்டும் இதே மன்னனால் அதே ஆண்டில்தான் நிறுவப்பட்டது. இரண்டும் தமிழ் வட்டெழுத்தில்தான் எழுதப் பட்டுள்ளன.
மானூரில் உள்ள இந்த கல்வெட்டை புகழ் பெற்ற பொக்கிசம் எனலாம். காரணம் கிராம சபையில் எப்படி உறுப்பினர்களைச் சேர்ப்பது என இந்த கல்வெட்டு தெளிவாக விளக்குகிறது. அந்த கிராம சபையை “மானநிலை நல்லூர் மகாசபை” என அழைக்கின்றனர். இந்த சபைக்கு உறுப்பினரா வதற்கான கீழ்க்கண்ட தகுதிகள் மற்றும் விதிகளை வாசிக்கும் போது ஆச்சரியமாகயிருந்தது.
1. வேட்பாளர்கள் 35 முதல், 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2. கல்வி அறிவுடன் பெற்றவர் களாக இருக்கவேண்டும்.
4. கல்வி மட்டுமல்ல சம்பாதித்து அரசுக்கு, வரி கட்டுபவராகவும் போட்டியாளர்கள் இருக்க வேண்டும்.
5. அவர்களிடம் அரை வேலி நிலம் இருக்கவேண்டும்.
6. அத்துடன் திட்டங்களைச் செய்து முடிக்கும் திறமை சாலிகளாகவும் இருக்கவேண்டும்.
7. அனைத்திற்கும் மேலாக நல்லொழுக்கம் கொண்டவ ர்களாகவும் இருக்கவேண்டும்.
8. வேட்பாளர்கள் நல்ல குணம் படைத்தவராகவும் இருத்தல் அவசியம்.
9. கடந்த ஐந்தாண்டுகளில் எந்த பொதுப் நலப் பணியிலும் இருந்திருக்கூடாது.
(இந்த எட்டு சட்டங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது சட்டங்களை மட்டும் என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை)
ஆனாலும் மேலே உள்ள இந்த எட்டு தகுதிகள் மட்டும் இருந்து பயனில்லை.
1. பொது நலப்பணியைச் செய்து முடித்து கணக்குக் காட்டா தவர்கள்.
2. மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
3. திருடிய வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள்
4. லஞ்சம் வாங்கியவர்கள்
5. மேற்கண்ட குற்றங்களைச் செய்து பின்னாளில் நல்லவர் களாக வாழ்பவர்கள்.
6. மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்ட வர்களின் தாய் மற்றும் தந்தை வழி சொந்தங்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியாது.
இந்த ஆறு சட்டங்களும் அருமையாகத்தான் உள்ளன. ஆனால் ஆறாவது சட்டம் தேவையற்றது என நினைக்கிறேன். குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் எப்படி அனைவரையும் குற்றவாளி எனக் கருதமுடியும்? என்ற சிந்தனை என்னுள் வலுக்கிறது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மிகச் சிறந்தவராகவே இருப்பார் என்பதினில் ஐயமில்லை. இருந்தாலும் இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே அந்த பணியில் இருக்க முடியும். பின்னர் புது நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதற்குக் காரணம் நிறைய நல்ல மற்றும் திறமையானவர்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவது அவசியம் எனப் பாண்டிய மன்னன் சிந்தித்திருப்பான் என நினைக்கிறேன்.
முனைவர் சுதாகர் மேலும் வல்லவன்கோட்டை கல்வெட்டுகள் பல தகவல்கள் கூறுகிறார்.
(நதி வற்றாமல் ஓடும்)


