கிறிஸ்டியானோ ரொனால்டோ (பெப்ரவரி 5, 1985) போர்த்துகீச கால்பந்து போர்த்துகீசிய நாட்டு கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2003-2022 வரை உலகின் தலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்கு 2003-2009 வரை விளையாடிய நாட்கள் உலகம் முழுவதும் இவரின் பிரபலத்தை அதிகரித்தது. அதன் பின்னர் இவர் எசுப்பானியா நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடினார். புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து அணியான யுவெண்டஸ் அணிக்காகவும் 2018-2021 வரை விளையாடினார். அதன் பின்னர் மான்செஸடர் யுனைடெட் அணிக்கு 2021-2022 வாக்கில் மறுபடியும் விளையாடினார். 2022 உலக கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியையும், அணியின் நிர்வாகம், பயிற்சியாளர்/மேலாளர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ததற்காக அவருடைய விளையாட்டு ஒப்பந்தத்தை நிரந்தரமாக முடித்துக் கொண்டது அந்த கிளப். அதன் பின்னர் சவூதி அரேபியாவின் கிளப்பான அல் நாசர் அணிக்கு தற்போது விளையாடி வருகிறார். இவருடன் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சேர்ந்து உலகின் இரண்டு தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ரொனால்டோ தான் தற்போதைய உலகின் அதி பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு 50 முதல் 90 கோடி வரை இவரை பொது வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர்.
இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட வீரர்களில் இவர்தான் முதன்முதலாக அதிக விலைக்கு 2009 இல் மான்செஸ்டர் யுனைடெட் இல் இருந்து ரியால் மாட்ரிட் க்கு விற்கப்படார். இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் US$/ 80 மில்லியன்£ ஆகும்.
தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்திங் C.P என்ற கழகத்தில் விளையாடும்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியான அலெக்ஸ் பெர்குசன் இவரின் ஆட்டத்தை பார்த்து வியந்து இவரை தன்னுடைய கிளப்பிர்க்கு விலைக்கு வாங்க முடிவெடுத்தார்.


