தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 5,947 மாணவா்-மாணவிகள் எழுதினா்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வு 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இத்தேர்வை 5,947 மாணவா்-மாணவிகள் எழுதினா்.
இதற்கென மாவட்டத்தில் 22 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தோ்வில் வெற்றி பெறும் மாணவா்-மாணவிகளுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலா் ரெஜினி தெரிவித்தார்.


