விளாத்திகுளத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்நிலைக் கருவூல அலுவலகத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சார்நிலைக் கருவூல அலுவலக கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் திறந்து வைத்தார். நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகித்தார்.
நிகழ்வில் மாவட்ட கருவூல அலுவலர் மகாராஜன், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், உதவி கருவூல அலுவலர் மோகன் கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ஜெகநாதன், வருவாய் ஆய்வாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


