மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் துறை பட்டப் படிப்பு இந்த ஆண்டு முதல் தொடங்கப் பட்டது. இந்த படிப்பில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். முனைவர் சுதாகர் தான் இந்த துறையின் தலைமை பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வருகிறார். இவர் தொல்லியல் படித்தவன் இல்லை. தொல்லியல் ஒரு அங்கமான மரபணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்.
தொல்லியல் உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் உதவிப் பேராசிரியர் மதிவாணன் அவர்கள் முறைப்படி இந்த மாணவர்களுக்கு தொல்லியல் நுட்பங்களைக் கற்பித்து வருகின்றனர்.
இவர்கள் தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் குன்னத்தூர் பொத்தையில் அரிய பொக்கிஷங்களை தற்போது பார்வையிட்டு பதிவு செய்துள்ளனர். அதற்கு இணையாக திருநெல்வேலியில் உள்ள மற்றொரு தொல்லியல் களம் தான் வல்லவன் கோட்டை.
வல்லவன் கோட்டை என்ற கிராமம் மனோண்மணியம் பல்கலைக் கழகத்திலிருந்து வடமேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுகன்யா என்ற மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தொல்லியல் பட்டப் படிப்பு தொடர்ந்து வருகின்றார். இந்த மாணவி சுகன்யா வகுப்பறையில் பேராசிரியர்கள் கற்றுக் கொடுத்த நுட்பத்தைப் பயன்படுத்தி வல்லவன் கோட்டையில் ஒரு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.
இதனைப் பற்றி ஆய்வு செய்ய இந்த துறைப் பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் படிக்கும் அதனை மாணவ மாணவியர்களும் வல்லவன் கோட்டைக்குச் சென்றனர்.
வல்லவன் கோட்டை பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் சுற்றித் திரிந்தனர். முள்ளம்பன்றிகள் அந்த பகுதியில் இருக்கிறது என அங்குக் கிடைத்த அதன் முட்கள் சாட்சி அளித்தன.
முள்ளம்பன்றியின் முட்கள் அவ்வளவு அழகாகக் கலை நயத்துடன் செய்யப் பட்டது போல் இருந்தது. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் இந்த முட்களை மூக்கில் குத்திக் கொள்வார்களாம். அந்த ஞாபகம் முனைவர் சுதாகருக்கு வந்தது. அதனால் அவர் மூக்குக் கீழ் வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டார்.
இந்த மலை அழகாக இருந்தது. மலை ஏற ஏதுவாக இருந்தது. இந்த மலையில் இருமுறை ஏறி இறங்கினார்கள். இதனால் நல்ல உடல் பயிற்சியும் கிடைத்தது.
மாணவி ஒருவர் கையில் ஒரு பொட்டலம் வைத்திருந்தார். அது என்ன? எனப் பார்க்கும் போது, அது மைதா மாவுப்பொட்டலம் என தெரிந்தது. மலையில் அலைந்து திரிந்ததற்கு சில தின்பண்டங்களும் சூடா ஒரு காப்பியும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.? ஆனால் அவளிடம் மைதாமாவை மட்டும்தான் இருந்தது. மைதா மாவைக் கொண்டு என்ன தின்பண்டம் செய்யப் போகின் றார்கள்? எனச் சிந்தித்தவாறே நடந்தேன்.
மாணவி சுகன்யா ஊருக்கு வெளியே உள்ள மாடசாமி கோயிலுக்கு அழைத்துச் சென்றாள். அங்குதான் அந்த கல்வெட்டு உள்ளது என எங்களிடம் காட்டினாள். அவள் காட்டியது ஒரு தூண். அந்த தூணில் சந்தன மற்றும் குங்கும திலகமிட்டு ஒரு வெள்ளை வேட்டிக் கட்டப் பட்டிருந்தது. முதலில் முனைவர் சுதாகருக்கு கண்ணுக்கு எழுத்து எதுவும் தெரியவில்லை. கூர்ந்து பார்க்கச் சொன்னார். முனைவர் சுதாகர் நன்றாக பார்த்தார்.
அங்கும் இங்குமாக எழுத்துக்கள் கண்ணுக்குப் புலப்பட்டது. ஆனால் தமிழ் எழுத்துக்கள் அடங்கிய இந்த தூணின் மேல் கோட்டை மாடசாமி என எழுதி இருந்தது .
இது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மக்கள் இந்த தூணை வழிபட்டு வருகின்றனர்.
“தமிழ் வட்டெழுத்துள்ள இந்த தூணைக் கோட்டை மாடசாமி” என வழிபட்டு வருகின்றனர். நாங்களும் இதனை வழிபட்டோம்.
சந்தனம் மற்றும் குங்கும திலகம் தூணிலிருந்த எழுத்துக்களை மறைத்த படி இருந்தது. அதனால் எங்கள் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அந்த தூணிலிருந்த சந்தனம் மற்றும் குங்குமத்தை ஒரு ஈரத் துணியைக் கொண்டு சுத்தப்படுத்தினார்கள். பின்னர் தூணின் மேல் உள்ள ஈரப்பதத்தைத் துடைத்து எடுத்தனர். அடுத்து அவர்கள் கொண்டு வந்த மைதாமாவை அந்த தூணில் தடவினார்கள். நான் ஏதோ தின்பண்டம் செய்யவே மைதா மாவைக் கொண்டு வந்துள்ளனர் என நினைத்திருந்தார் முனைவர் சுதாகர். இவர்கள் இதனைத் தூணில் பூசுகின்றார்களே? எனச் சிந்தித்தவாறு நின்று கொண்டிருந்தார். பின்னர் ஒரு பஞ்சை வைத்துத் தடவி தடவி மைதாமாவை மேலோட்டமாக துடைத்தனர்.அவருக்குஆச்சரியமாக இருந்தது. வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் சுண்ணாம்பு வில்லையால் எழுதப்பட்டது போல் அந்த தூணிலிருந்த எழுத்துக்கள் பளீர் வெள்ளை நிறத்தில் கண்ணுக்குப் புலப்பட்டது !
ஆனாலும் அவரால் அந்த கல்வெட்டை வாசிக்க முடியவில்லை.தொல்லியல் பேராசிரியர்கள் இதனை வாசித்தார்கள்.
“பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் 25ஆம் ஆட்சி ஆண்டில் களகொடி நாட்டு உள்ள குலமங்கலத்தில் என்ற ஊரில் கலங்குடியான் மணவாட்டி வேம்பநாட்டு நீலபுறத்தாளியம் மொழி சாட்டி நிதிவரமங்கலத்து அரும்புடை பெரும் பள்ளிக்கு 50 ஆடுகள் முதல் தவணையாகவும் மேலும் 55 ஆடுகளை இரண்டாம் தவணையாகவும் மொத்தமாக 105 ஆடுகள் தானமாகக் கொடுத்ததாக” இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது” என கூறினார்கள்.
மேலும் பல தகவல்கள் அதில் பொறிக்கபட்டிருந்தது.
(நதி வற்றாமல் ஓடும்)


