ஆறாம்பண்ணை ஊராட்சி பகுதிகளில் வெள்ளத்தை தடுக்க கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல் காதர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதியில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் எங்கள் ஊருக்குள் புகுந்து, எங்கள் ஊர் ஒரு தீவாக மாறியது. எங்கள் ஊர் தாமிரபரணி நதிக்கரை ஓரம் அமைந்துள்ளது. ஊருக்குள் தண்ணீர் வருவதற்க்கு பொதுப் பணித்துறைக்கு சொந்தமான கரைகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை 7 இடத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது தான் முக்கிய காரணம்.
அதனால் தான் ஊருக்குள் தண்ணீர் வந்து விட்டது. இதனால் மழை பெய்யும் போதும் ஆற்றில் வெள்ளம் வரும் போதும் எங்கள் ஊர் பொது மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் எங்கள் ஊர் கரையை சரி செய்து வரும் காலங்களில் ஊர் மக்கள் அச்சம் இல்லாமல் வாழ, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


