தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் தைப்பூச திருநாளுக்கு பின்பு மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
தைப்பூச திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர். இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மீன்களுக்கு விலை கிடைக்காமல் மீனவர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் தைப்பூச திருநாளுக்கு பின்பு இன்று சனிக்கிழமை விடுமுறை தினமும் என்பதால் காலை முதலே திரேஷ் புரம். நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதன் காரணமாக ஒரு வாரத்திற்கு பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. சீலா மீன் கிலோ 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரைக்கும் விலை மீன் கிலோ 300 ரூபாய் முதல் 450 ரூபாய் வரைக்கும் ஊலிமீன் கிலோ 450 ரூபாய் வரையும், பாறை கிலோ 350 ரூபாய் வரையும் குருவலை கிலோ 300 ரூபாய் வரையும் கேரை கிலோ 200 ரூபாய் வரையும் சாலை மீன்கள் வரத்து முற்றிலும் இல்லாத காரணத்தினால் கீரிமின் சாலை ஒரு கூடை 1500 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு வாரத்திற்குப் பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


