முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் கோயில் மிகவும் பழமையானது. முத்தாலங்குறிச்சியில் உள்ள அபூர்வ லெட்சுமி நரசிம்மருக்கு பூஜை செய்தால் வாழ்வில் அனைத்து நலங்களும் நடைபெறுகிறது என பக்தர்கள் நம்புவதால், தமிழ்நாட்டில் பல்வேறு இடத்தில் இருந்து பக்தர்கள் இந்த கோயிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மாதம் தோறும் சுவாதி நாளில் சிறப்பு திருமஞ்சனம் பக்த கைங்கர்ய சபா தலைவர் சோமசுந்தரம் தலைமையில் நடந்து வருகிறது. இந்தகோயிலில் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. அதன் பின் சிறப்பு திருமஞ்சனம், ஜெபம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை உ.வே.ஸ்ரீ ரகு தீபா தம்பதிகள் கலந்துகொண்டு செய்தனர். பூஜை ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர்பத்பநாபன், சேகர் கம்பர், செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் அர்ச்சகர் கோபி உள்பட குழுவினர் செய்திருந்தனர்.,


