தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைகுளம் புதுமை வள்ளல் புனித நிக்கொலாசியார் ஆலயத்தின் 118 ஆம் ஆண்டு திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
.
தூத்துக்குடி முன்னாள் மறைமாவட்ட ஆயர் இவோன் அம்ப்ரோஸ் தலைமையில் பவணியாக வந்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து குறுக்கு சாலை முதன்மைகுரு அருட்தந்தை டோமினிக், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை நெல்சன் பால்ராஜ், சவேரியார்புரம் பங்குதந்தை குழந்தை ராஜன், தருவைக்குளம் பங்குதந்தை வின்சென்ட், உதவி பங்குதந்தை சஜன் ஆகியோர் திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பரப் பெருவிழா ஆராதனை பிப்.3ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெறும். பிப்.4ஆம் தேதி காலை 6 மணி அளவில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறும். புதுமை வள்ளலின் திருவுருவப் பவனி 8 மணிக்கு நடைபெறும். மாலை 5 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு நடைபெறும். 6.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தருவைக்குளம் கட்டளைக்காரர்கள், பங்குதந்தையர்கள் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்..


