தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 75வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 75வது குடியரசு தினவிழா மாநகர் நல அலுவலர் சுமதி தலைமையில் நடந்தது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் பெருமழைவெள்ளத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் பொறியாளர் பாலகிருஷ்ணன், துணைப் பொறியாளர் சரவணன், மண்டல ஆணையர்கள் தனசிங், ராமசந்திரன், சந்திரமோகன், சேகர், சுகாதார ஆய்வாள்கள் ஸ்டான்லி வேதமாணிக்கம், ராஜபாண்டி, அரிகனேஷ், கண்ணன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், பாலகுருசாமி, நிர்மல்ராஜ், உட்பட மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


