கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர், வீராங்கணைகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த அணியில் தூத்துக்குடி மாநகரை சேர்ந்த சுகந்தன் ஆண்கள் அணியிலும் கிரிசோலின் மற்றும் சாதனா பெண்கள் அணியிலும் விளையாடியுள்ளனர்.
மேலும் உயரம் தாண்டுதலில் ஆலிஸ் தேவ பிரசன்னா 166 cm உயரம் தாண்டி வெற்றி பெற்றுள்ளார். அவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் வெற்றிகளை பெற்று நம் மாநகருக்கு மட்டுமல்ல நம் மாவட்டத்திற்கே கிடைத்த பெருமை மேலும் வருங்காலங்களில் பல வெற்றிகளை பெறுமாறு வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



