செய்துங்கநல்லூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருவரங்க செல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. இதையொட்டி முதல் நாள் அம்மனுக்கு மாக்காப்பு சாத்தப்பட்டது. மறு நாள் காலை பால் குடம் எடுத்து ஊர் சுற்றி வந்தது. செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக இந்த பால்குடம் சுற்றி மதியம் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது.
அதன் பின் உச்சிகாலபூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். பக்தர்கள் சப்பரத்தினை எதிர்பார்த்து காத்திருந்து அம்மனை வணங்கி நின்றனர். அதன் பின் மூன்றாம் நாள் அதிகாலையில் அம்மன் கோயிலை சப்பரம் வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு அபிசேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து படப்பு எடுக்கப்பட்டு கோயிலில் திருமால் பூஜை நிறைவடைந்தது. இதன் ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சைவ வேளாளர் சமுகத்தினர் செய்திருந்தனர்.



