தூத்துக்குடியில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் மகன் வின்சென்ட் அபில்டன் திருமணம் ஆலந்தலை ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில் மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவன் அம்பரோஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு ஆலந்தலையில் திருமண மஹாலில் அம்மா லவ்வர் மாதா குடிபோதை மறுவாழ்வு இயக்க செயலாளர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் ஆலந்தலை பங்குதந்தை சில்வெஸ்டர் பாலன் தலைமையில் திருமண விழா கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமக்கள் வீட்டார் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர். அதன்பிறகு இரவு 7 மணி அளவில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு மாதா கோவில் அருகில் ஸ்னோஹால் திருமண மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வணிகர் சங்க தலைவர் பழரசம் விநாயக மூர்த்தி, உமா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஆனந்த் குமார், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன், கெளரவ தலைவர் குமாரவேல், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், பத்திரிகையாளர்கள் பாலகிருஷ்ணன் அண்ணாதுரை மார்க் மகேஷ் மார்கின் ராபர்ட் முத்துமாரியம்மன் கணேசன் தூத்துக்குடி முத்துநகர் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் காட்சன், செயலாளர் ராஜா, விமல் ராஜ், சேக் மதர், ஜெயக்குமார், மோகன், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக வள்ளி ராஜ், நடராஜன், மாணிக்கம், திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஃப்ளோரன்ஸ், மாநகர தொண்டர் அணி திமுக செயலாளர் முருக இசக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


