அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் பாஜக சார்பில் மெகா கோலப்போட்டி நடைபெற்றது.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு கோலப்பட்டி நடத்தப்பட்டது.
இந்த கோலப்போட்டியில் 774 பெண்கள் கலந்துகொண்டு தங்களது வீட்டு முன்பு ஆர்வத்துடன் கோலம் போட்டனர். இதில் ராமர் லட்சுமணன் சிலை வடிவம், ராமன் சீதா உருவம் ஆஞ்சநேயர் உருவம் போன்றவற்றை பல்வேறு வடிவங்களில் கோலம் வரைந்திருந்தனர். இந்த கோலப்போட்டியில் 14 பேர் நடுவராக பணியாற்றி பரிசுக்கான கோலங்களை தேர்ந்தெடுத்தனர்
இதில் பரிசு பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கனகசபாபதி தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. இதில் 39 வது வார்டு தலைவர் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் உஷா தேவி முதல் பரிசு பெற்ற ஜோதிலட்சுமிக்கு 1 பவுன் தங்க மோதிரம், 2வது பரிசு பெற்ற 3பேருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு, 3வது பரிசு பெற்ற 20 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கினார். மேலும் கோலம் போட்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர்கள் பாலமுருகன், விக்னேஷ் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சந்தனகுமார், பாலாஜி, தொழிலாளர் நல சங்க பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரேசன், ஐ.டி விங்க் மாவட்டச் செயலாளர் செல்வநாயகம், கிழக்கு மண்டல மகளிர் அணி துணைத் தலைவர் லட்சுமி வேல்கனி, நலவாரிய மாவட்ட தலைவர் சேர்ம குருசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


