மாநில அளவிலான சதுரங்க போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளான்.
மாநில அளவிலான சதுரங்க போட்டி தூத்துக்குடியில் நடந்தது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 4 ம்வகுப்பு மாணவர் டெமிட்ரியஸ் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு மாநில அளவில் 10 வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவரை பள்ளி தாளாளர் தங்கம் நளினா, முதல்வர் கலா ஜேனட் மற்றும் ஆசிரியர்கள், மாணவ_ மாணவிகள் பாராட்டினர்.


