நம்நாட்டில் எப்படி அனுமன் அல்லது ஆஞ்சனேயரோ… அதே போல சீனாவில் அற்புத சக்திவாய்ந்த சாவற்ற, இரண்டு மலைகளை தோளில் சுமந்து பல ஆயிரம் மைல் தூரத்தை ஒரே தாவில் தாவிவிடும் அபார உடல் சக்தி மிகுந்த குரங்குகளின் தலைவன் தான் வூகாங்.
அவரது பெயர்தான் இந்த மாதம் உலகச் செய்திகளில் பேசுபொருளானது. எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக உருவாக்கும் சீனர்கள் உலகின் உயரமான வூகாங்கின் சிலையை… இல்லை…. அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. அவர்கள் வூகாங்3 எனப்படும் குவாண்டம் கம்ப்யூட்டரை (3ஆம் தலைமுறை) உருவாக்கி உலகத்தின் பலநாடுகளுக்கும் அதன் இணைப்பினை வழங்கியிருக்கிறார்கள். இப்போது அதை அதிகம் உபயோகிப்பது அமெரிக்கர்கள் தான் என்று தகவல் வேறு கசிகிறது.
அப்படியென்ன பிரமாதம் இந்த குவாண்டர் கம்ப்யூட்டர்? நம்ம இந்தியாவிலேயே அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தினாலும் ஆண்டுக்கணக்கில் செய்யவேண்டிய கால்குலேசன்களை பத்துலட்சத்தில் ஒரு பங்கு வினாடி நேரத்தில் செய்து முடித்துவிடும் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர்கள். இதன் மூலம் என்னவெல்லாம் சாதிக்களாம்?! நம்மைப்போல் விமானப்படைக்கு பிரான்சு, இரஷ்யா, அமெரிக்கா என்று கெஞ்சி கூத்தாடி அதிக விலைக்கு வாங்காமல்… இந்த விமானங்களை விட அதிவிரைவாகப்பறக்கவல்ல அடுத்த தலைமுறை HGV எனப்படும் ஹைப்பர்சோனிக் க்ளைடு வெகிக்கில் எனப்படும் ஏவுகணைகளை சொந்தமாக நுணுக்கமாக டிசைன் செய்து உருவாக்கலாம். சென்னை வெள்ளத்தை இன்னும் துல்லியமாக இந்த தெருவில் இவ்வளவு மழை பெய்யும்.. இவ்வளவு உயரம் தண்ணீர் தேங்கும் என்று ஒரு சிலநாள் முன்னதாகவே கணித்துவிடலாம்.
இப்படி அவர்கள் எங்கோ சென்றுகொண்டு இருக்கிறார்கள் …


