தென்காசி மாவட்டம், கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன்கோயிலில் தைப்பூசத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி காலை 5 மணிக்கு ஆலய நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு திருச்செந்தூர் கிருஷ்ணன் குழுவினர் நடத்தும் கணபதி ஹோமம் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலை விசேஷ பூஜைகள் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். இந்த நிகழ்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்கள். தொடர்ந்து ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெறும். காலை 11.45 மணிக்கு விடுதலை போராட்டத் தியாகிகள் மற்றும் உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்கள் சிலரின் குடும்பத்தினர் கௌரவிக்கப்படுகிறார்கள். சாய் ராஜ் மீடியா ராஜேஷ் மலர் வண்ணன் தாயரிப்பில் “தோரணமலை முருகா வருவாயே” ஒலி மற்றம் ஒளி வடிவில் பாடல்கள் வெளியிடு, முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “தோரணமலையான்” நூல்வெளீயீடு, பதிப்பாளர் ஆ. பொன்னுசாமி, ஆசிரியர் கடையம் பாலன், கவுரவ ஆசிரியர் பண்டித காழியூர் நாராயணன் ஆகியோர் வழங்கும் தோணமலை முருகன் சிறப்பை தாங்கி வரும் “வான் விளக்கு” முதல் மாத இதழ் வெளியிடு மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறும். மாலை 6 மணிக்கு தோண மலை முருகன்கோயில நிர்வாகமும் திருச்சி அகத்தியர் சன்மார்க்க சங்கமும் இணைந்து நடத்தும் திருக்கோவில் அடிவாரம் முழுவதும் மகா சரவண ஜோதி ஏற்றுதல் தொடர்ந்து வள்ளியம்மாள் புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் இரவு 7 மணிக்கு நடைபெறும். காலை 7.45மணி முதல் மாலை வரை அன்னதானம் நடைபெறும்.
இந்த திருக்கல்யாண உபயதாரராக பாண்டிச்சேரி முருக பக்தர் கு.கிருஷ்ணமுர்த்தி, கி. சுகுந்தா ஆகியோர் திருப்பணி செய்கிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை முன்னாள் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் குடும்பத்தினர் சார்பில் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.


