தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் செய்துங்க நல்லூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருள் வழங்கும் நிகழ்வு நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அய்யாதுரை பாண்டியன் அறக்கட்டளை சார்பாகவும் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கம் சார்பாகவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றித் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் காண சங்கத்தின் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன .
இந்த நிகழ்வில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, விவசாய சங்கத்தலைவர் குமார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் ராஜ், அய்யாத்துரை பாண்டியன் அறக்கட்டளை சார்பில் காளிராஜ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மணி, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட நிர்வாகி சன்னியாசி , மாற்றுத்திறனாளி சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கண்ணன், சமூக சேவகர் அழகு, இராமசந்திரன், , மகாராஜன், பால கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 100 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.


