காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடியில் காணும் பொங்கலை முன்னிட்டு, முத்துநகா் கடற்கரை, புதிய துறைமுக கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதேபோன்று, ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, சிதம்பர நகா் எம்.ஜி.ஆா். பூங்கா, விவிடி பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் செய்த பலகாரங்களை கொண்டு வந்து உண்டு மகிழ்ந்தனா். விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனா்.
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக முயல் தீவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாட்டுக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பின்னா், வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
மாவட்ட இசைப் பள்ளி சாா்பில் பரதநாட்டியம், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை, கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திர போராட்டத்தின் போது நிகழ்ந்த சண்டைக் காட்சி புகைப்படங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.
பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் 1200 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மாநகா் பகுதியில் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சாதாரண உடைகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.


