மீனாட்சிபட்டிஅருகேயுள்ள ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியின் பத்தாவது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை
வகித்தார். கல்லூரி தாளாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்து
வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் இக்கல்லூரியில் பயின்று வெற்றிகரமாக
படிப்பை நிறைவு செய்த பொறியாளர்களுக்கு
சபாநாயகர் அப்பாவு சிறப்புரையாற்றி, பட்டங்கள்
மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்கள். பட்டம் பெற்ற பொறியாளர்களை
ஊக்குவிக்கும் விதமாக, சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றைய
பொறியாளர்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.
பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட
மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லூரி முதல்வர்
முனைவர் அருண்மொழி செல்வி நன்றி கூறினார். விழாவில் பிரியா பிரகாஷ் ராஜ்குமார்,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் திருமண்டல பெருமண்டல
உறுப்பினர் தேவ சகாயம், அம்மன்புரம் ஞானராஜ், அடைக்கலாபுரம்
தங்கராஜ் புதுக்கோட்டை யூனியன் ஒன்றிய செயளாளர்
ஜெயக்கொடி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைச் செயளாளர் வழக்கறிஞர்
ஆறுமுகப்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயளாளர் கொம்பையா
பாண்டியன், ஏரல் முன்னாள் பேருராட்சி தலைவர் பாலகிருஷ்ணன்,
மாவட்ட பிரதிநிதிகள் அருண்கிருஷ்ணன், சண்முக சுந்தரம், தூத்துக்குடி
ஒன்றிய செயளாளர் சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் நகர செயளாளர் சுப்புராஜ்,
தன்னூத்து பேச்சிமுத்து மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமையில்
பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


