ரெட்டியார்பட்டி கு.ரா.அரசு மேல்நிலைப் பள்ளியில் அஸ்ட்ரோ க்ளப் துவக்கவிழா (ஜன 12.2024) திருநெல்வேலி அஸ்ட்ரோ க்ளப் சார்பில் நடைபெற்றது. விழாவில் தாஸ் மாநில செயற்குழு உறுப்பினர், டாக்டர் முத்துசாமி திருநெல்வேலி அஸ்ட்ரோ க்ளப் ஒருங்கிணைப்பாளர்,தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி வரவேற்றார். பள்ளி அஸ்ட்ரோ க்ளப் சார்பில் தொலைவில் உள்ள காட்சிகளை டெலஸ்கோப்பில் காண ஆசிரியர்களும் 540 மாணவர்களும் பயிற்சி பெற்றார்கள் .
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மேலும் கூறியதாவது, தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கடந்த 3 வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் வானியல் தொடர்பான பரப்புரை மற்றும் தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன்,செவ்வாய்,சனி போன்ற கோள்களை காணும் வான் நோக்கல் நிகழ்வு போன்ற செயல்பாடுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இவ்வருடம்கோள் திருவிழா வரவேற்ப்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.


