வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என மீனவளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், தி.விஜயராகவன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி 12.01.2024 அன்று தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா கடற்பகுதி மற்றும் குமரிக்கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 40-45 கி.மீ வேகம் வரை வீசுவதுடன் இடையிடையே 55 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


