இளையோர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தூத்துக்குடி மாவட்ட வீரர்கள் தேர்வு திருச்செந்தூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் நடத்தும் 49வது இளையோர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் வைத்து வருகின்ற ஜனவரி 14 ,15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட இளையோர் ஆண்கள் அணி வீரர்களுக்கான பொருக்கு தேர்வு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உள் அரங்கில் நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபா ராஜன் தலைமையில் நடந்த இந்த பொறுக்குத் தேர்விற்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியில் கல்லூரி முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக TDTA குருகால் பேரி மேல்நிலைப் பள்ளி தாளாளர் விமல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கபடி கழக இணை செயலாளர் அந்தோணி, மாவட்ட டெக்னிக்கல் கமிட்டி தலைவர் கரிகாலன், டெக்னிகல் கமிட்டி உறுப்பினர் சாம்சன், நடுவர் குழு இணைக் கன்வினர் அசோக் குமார், திருச்செந்தூர் யூனியன் பொறுப்பாளர் சுரேஷ், மாவட்ட நடுவர்கள் அர்ஜுனன், பொன்னையா சாமுவேல், சண்முகராஜ் வேல் மணிகண்டன், கபடி ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த தேர்விற்கு 215 வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில், டி.நீதிவேல், எம்.செல்வகுமார், என்.மணிகண்டன், எஸ்.ஞான அபிஷேக், ஜெ.ஜெனிஸ்டன் மோசஸ், ஜி.ஹரிஹர ஜெயபாலன், பி.முத்து மகேஷ், எல். தஸ்நேவிஸ் ராஜன், எஸ். கார்த்திக், எம்.தமிழ்ச்செல்வன், எம்.லக்ஷ்மி மாருதி, ஜி. தீபக் சிங் பால்ராஜ் ஆகிய 12பேர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக உதவி பேராசிரியர் சாம்சன் நன்றியுரை ஆற்றினார்.


