கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் சிவனைந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது.சிவனைந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அமுதவல்லி தலைமை வகித்தார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் ஆசிரியை ராஜேஸ்வரி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.


