கிரித்திக் ரோஷன் அல்லது ஹிரித்திக் ரோஷன் (10 ஜனவரி 1974 பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார்.
1980 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, கஹோ நா… பியார் ஹே என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இவரது நடிப்பிற்காக அதிக பாராட்டுகளைப்பெற்ற சில படங்கள் கோயி… மில் கயா, க்ரிஷ் , தூம் 2 மற்றும் ஜோதா அக்பர் ஆகியவைகள் ஆகும். இதில் ஜோதா அக்பர் இது வரை வெளிவந்த திரைபடங்களில் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் இந்த படத்திற்காக அவருக்கு பல்வேறு சிறந்த நடிகர் விருதுகளும் வழங்கபட்டன.
2008 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் அவரது ஜோதா அக்பர் திரைபடத்திற்காக ரஷ்யாவின் கஸானில் நடைபெற்ற கோல்டன் மின்பார் இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் அவரது முதல் சர்வதேச விருதினை வென்றார்.ஹிரித்திக் அவர்கள் தன்னை ஒரு முன்னணி பாலிவுட் நடிகராக நிலைபடுத்திக் கொண்டுள்ளார்.


