சாத்தான்குளம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது விவசாய தோட்டத்தில் சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். அதனை மூடாமல் விட்டுள்ளனர். இந்நிலையில் தோட்டத்தில் மேய வந்த ஆடு தடுமாறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த ஞானமுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ஹேரிஸ் தாமஸ் செல்வ பாபு, வீரர்கள் தவசிராஜ் முத்துமாரி, துரை, சீனிவாசன் பிரவீன் சாமுவேல் ஆகியோர் விரைந்து சென்று ஆழ்துள கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை போராடி உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்
ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உடன் அதனை பாதுகாப்புடன் மூட வேண்டும் என்பது அரசு விதி ஆனால் திறந்தவெளியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆடு மீட்கப்பட்டுள்ளது அதிகாரிகள் ஆய்வு செய்து மூடப்படாமல் உள்ளஆழ்துளை கிணறுகளை கண்காணித்து உயிரிழப்பு தடுக்கும் வகையில் பாதுகாப்புடன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


