தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என் பி ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்
தூத்துக்குடி ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பிரைன் நகர் அம்மன் கோவில் தெருவில் மரம் நடும் விழா ஆல் கேன் டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் நடந்தது
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி .ஜெகன் பெரியசாமி மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து அனைத்து உறுப்பினர்களுக்கும் காலண்டர் வழங்கி சிறப்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிங்கராஜ், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், முன்னாள் மாமன்ற கவுன்சிலர் இசக்கிமுத்து, டிரஸ்ட் உறுப்பினர்கள் கேசவன், மகேந்திர சிங், ரகுபதி, பிரசன்னா, செந்தில், மருத பெருமாள், பால்ராஜ், ஜெயராஜ், முருகன், ஆசீர், தினேஷ்குமார், மைக்கில், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்


