5 ஜனவரி 1592 இல், ஷஹாப்-உத்-தின் முகமது குர்ரம், பின்னர் ஷாஜஹான் என்று அழைக்கப்பட்டார், முகலாய பேரரசர் ஜஹாங்கீர் மற்றும் அவரது மனைவி ஜகத் கோசைனி ஆகியோருக்குப் பிறந்தார்.ஷாஜகான் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.
சிகாபுதீன் முகம்மது குர்ரம் என்பவர் முகலாயப் பேரரசின் 5வது பேரரசர் ஆவார். இவர் தனது பட்டப் பெயரான முதலாம் ஷாஜகான் என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார். ஷாஜகான் என்ற பாரசீகப் பெயருக்கு உலகின் மன்னன் என்று பொருள். இவரது ஆட்சியின் கீழ் முகலாயர்கள் தங்களது கட்டடக்கலைச் சாதனைகள் மற்றும் கலாச்சாரப் பெருமைகளின் உச்சத்தை அடைந்தனர்.


