தூத்துக்குடியில் உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மதர் ஃபைவ்ரோஸ் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மதர் ஃபைவ்ரோஸ் டிரஸ்ட் சார்பாக தூத்துக்குடி லூசியா காலனி, சில்வர் புரத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்பார்வை குறைபாடு உடைய மற்றும் கண் பார்வையற்ற நபர்களுக்கு மளிகை சாமான்கள், அரிசி, பாய் முதலிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் ஆர்க்கிடெக்ட் முகம்மது ஹயாஸ் பிரைய்லி முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார். அந்தோணி பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை என்பதை வலியுறுத்தினார். இதில் சமூக ஆர்வலர்கள் ரமேஷ், ராமச்சந்திரன், ஜவகர், பிசியோதெரபி முகமது நசீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


