வைப்பாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிஎல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி,நெல்லை, மதுரை, ராமநாதபுரம், என பல்வேறு பகுதிகளில் இருந்து 39 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவங்கி வைத்தார்.
பத்து மைல் தூரம் கொண்ட பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதலாவது பரிசு ரூ.1,11,265 ஐ விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசு ரூ.91,265ஐ விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு ரூ.71265ஐ வேலாங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும் பெற்றன,
9 மைல் தூரம் கொண்ட சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு ரூ. 51,265 ஐ விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசு ரூ.41,265 ஐ வேளாண் குளம் கண்ணன் மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு ரூ.31,265 ஐ துரைச்சாமிபுரம் சுரேஷ்குமார் மாட்டு வண்டியும் பரிசுகள் பெற்றன. இதனை தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியும் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு ரொக்கபணம், ஆட்டுகிடாய், LEDTV ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர்சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் கலந்து கொண்டனர். மாட்டு வண்டி போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரேக்ளா ரசிகர்கள் வந்து மாட்டு வண்டி போட்டியை கண்டு உற்சாகமடைந்தனர். மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் ஏற்பாடுகளை ராஜகம்பள மகாஜன சங்கம் வைப்பார்.


