தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை வெள்ளம் காரணமாக தேர்வு பாதிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே அரசு அறிவித்தபடி அரையாண்டு தேர்வு விடுமுறை டிச.23ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஜன.2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளை உள்ள வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பள்ளி கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர்.ஐஸ்வரியா இன்று ஆய்வு செய்தார்


