தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் முத்து பெருமாள். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை அந்த வழியாக வந்த மர்ம கும்ப கும்பல் அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட முத்துபெருமாள் சொந்த ஊரான புளியங்குளம் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


