தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளம் வெளியேற்றும் பணியை அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகன மழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பெருவளவில் பாதிக்கப்பட்டது இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஒன்பது அமைச்சர்கள் தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் என 11 அமைச்சர்களை நியமித்துள்ளார்.
அந்த வகையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் .ஐ. பெரியசாமி மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சியில் பாதிக்கப்பட்ட முத்தம்மாள் காலனி சங்கரப்பேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் பக்கீள் ஓடை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை கேட்டறிந்தனர்.
மேலும் ஸ்டேட் பேங்க் காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ராட்சச மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.


