தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு கொடுக்க வந்த 21 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


