கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.மருத்துவப் பணிகள் காசநோய் துணை இயக்குனர் டாக்டர்.க.சுந்தரலிங்கம் தலைமையில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்புரை ஆற்றினார்.
வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ண ஜோதி,சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
டாக்டர் சுந்தரலிங்கம் பேசுகையில், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு தொடர்ந்து ஏழாவது ஆண்டுகளாக சத்துணவு, புத்தாடை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். எஸ்தர் ராஜம் லயனல் தலைமையிலான முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில் ரூ.32,000/- மதிப்புள்ள சத்துணவு பொருட்களை 20 காசநோயாளிகளுக்கு வழங்கி உள்ளார்கள். நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் மாணவியர் சங்கத்திற்கு நன்றிகளையும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காசநோயை ஒழிக்க அரசுத்துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் காசநோய் இல்லா இந்தியா உருவாகும் என கூறினார்.
மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் ச.குப்புசாமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் மைய ஆய்வகநுட்பனர் க.தனலட்சுமி, மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.சந்தான சங்கர் வேல், சுகாதாரப் பார்வையாளர் முத்துலட்சுமி நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், செல்லப்பா, சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் , பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் , வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கம் இணைந்து செய்திருந்தார்கள்.


