நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாடைகளை சகோ. மோகன் சி. லாசரஸ் மற்றும் அவரது துணைவியார் ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் சுமார் 4 ஆயிரம் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் புத்தாடைகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி லாசரஸ் மற்றும் அவரது துணைவியார் ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய் திருந்தனர்.


