தூத்துக்குடி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சயன கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு விஸ்வரூப தீபாரணை நடந்தது.
இதனைத் தொடர்ந்து சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவன் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் அறங்காவலர்கள் செய்து இருந்தனர்.


