சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு இயந்திரம் ஓய்வின்றி பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனினும், பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டளையை ஏற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இன்று சென்னை மாநகராட்சி 192வது வார்டை சேர்ந்த நீலாங்கரை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.


