பாலச்சந்தர் என்பவர் தமிழ் திரையுலகில் மனோபாலா (8 திசம்பர் 1953 – 3 மே 2023) என நன்கு அறியப்பட்டவர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளரும் யூடியூப்பரும் ஆவார். தென்னிந்திய திரைப்பட உலகின் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் திகழ்ந்தார்.
மனோபாலா 1970களின் முற்பகுதியில் தமிழ் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜாவுடன் 1979-ல் “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான மனோபாலா தன்னுடைய 69 ஆவது வயதில் காலமானார்.


