உலகளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய, பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று, பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் ல் இன்று (டி.ச.06) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூரில் வைத்து நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுவைகுண்டம் தொகுதி ஜமாத் நிர்வாகிகள் SDPI கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் 31 ஆண்டுகால அநீதி குறித்து SDTU தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் உமர் மற்றும் செய்திங்கநல்லூர் இமாம் அசன் ஞானியார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பாபரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பாபரிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர்கள், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


