செய்துங்கநல்லூரில் உள்ள மிகவும் பழமையான சிவன் ஆலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மகாதேவ அஷ்டமி விழா மிகச்சிறப்பாக நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. அதன் பின் சிவன், அம்பாள் உள்பட பரிவாரதெய்வங்களுக்கு அபிசேகமும் அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து பைரவருக்கு சிறப்-பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பைரவருக்கு ஸ்ரீருத்ர ஹோமம் அபிசேகம் அலக்காரம் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்துராமன் செய்திருந்தார். பூஜை ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆன்மிக பேரவையினர் செய்திருந்தனர்.


