தென்னகத்தில் ஒரிருடங்களில் தான் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. நெல்லை டவுணில் உள்ள லெட்சுமி நரசிம்மரை போலவே மிகவும் பழமையான ஆலயம் தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி கிராமத்தில் உள்ளது. இந்த கோயில் பூஜையின்றி கிடந்தது. பராமரிப்பு இன்றி கிடந்த இந்த கோயிலை முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபா சார்பில் தற்போது பூஜை நடத்தி வருகிறார்கள். இந்த கோயிலில் திருமஞ்சனம் பூஜை நடத்தினால் தொழில் விருத்தி நடைபெறுகிறது. நாள் பட்ட கடன் அடைபடுகிறது. குழந்தைபேறு கிடைக்கிறது எனபே பக்தர்கள் அதிகமாக இங்கு வந்து திருமஞ்சன பூஜை செய்து வருகிறார்கள்.
இந்த கோயிலில் மாதந்தோறும் சுவாதி பூஜையும், மாதத்துக்கு இருமுறை பிரதோச வழிபாடும்நடந்துவருகிறது. கடந்த புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் விசேச பூஜை நடந்தது. கார்த்திகை மாதம் ஞாயிற்று கிழமை லெட்சுமி நரசிம்மருக்கு உதந்த நாள் என்பதால் இந்த கோயில் கார்த்திகை ஞாயிற்று கிழமை பூஜை நடந்தது. இந்த பூஜைக்காக நடை திறக்கப்பட்டு லெட்சுமி நரசிம்மர், ராம விநாயகர், வீரபாண்டீஸ்வரர், சிவகாமியம்மாள், பைரவர் உள்பட தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் பூஜை நடந்தது.
இந்த பூஜையில் திருமஞ்சனம் படைக்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் சேகர் செய்திருந்தார். இந்த பூஜையில் முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபை தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சேஷப்பன், பொருளாளர் செல்லபாண்டி, உறுப்பினர்கள் முருகன் , சுப்புலெட்சுமி உள்பட ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்னர். லெட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாட்டியில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் 9442322333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


