கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்காக கடல் காலநிலை குறித்த தகவல்களை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்திலிருந்து பெற்று ஒலி வடிவில் மீனவர்களின் அலைபேசி எண்ணிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் கட்டணமில்லா அலைபேசி எண் 18004198800 மூலம் மீனவர்கள் தொடர்பு கொண்டு தொழில் செய்து வந்தனர். தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளை “மச்சிலி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த செயலி மூலம் கடலில் வீசும் காற்றின் வேகம், அலையின் உயரம், நீரோட்டம் மற்றும் மீன்கிடைக்கும் தகவல்களை பெறமுடியும். இதை பயன்படுத்துவதற்கான பயிற்சியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அன்னைநகர் கிராமத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 40 க்கும் மேலான மீனவர்கள் கலந்துகொண்டு தங்கள் அலைபேசியில் play store மூலம் download செய்து பயனடைந்தனர். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கம் அளித்தனர்.


