தூத்துக்குடியில் வீட்டில் புகுந்த 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே ஆதிபராசக்தி நகர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 4 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தெர்மல் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நிலைய போக்குவரத்து அலுவலர் பா.ரோஷான், சிறப்பு நிலைய அலுவலர் ரா.காமாட்சி நாதன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டு குடிநீர் தொட்டியில் பதுங்கி இருந்த கட்டு விரியன் பாம்பினை லாவகமாக பிடித்து சென்றனர்.


