நாசரேத்தில் ரூ.15 இலட்சம் மதிப்பிலான நூலக கட்டிடத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாசரேத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் தமிழக மீன் வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் முன்னிலையில் தூத்துக்கு டிபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, நாசரேத் பேரூராட்சி வியாபாரிகள் தெருவில் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம் மாவட்ட கவுன்சிலர் செல்வ குமார், முன்னாள் எம்.பி. ஏடிகே ஜெயசீலன்,மாவட்ட திமுக பிரதிநிதி கள் அலெக்ஸ் புரூட்டோ, தாமரைச்செல்வன், முருகதுரை, அன்பு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


